இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த வேளையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்தார்.
அதன் காரணமாக சிகிச்சைக்கு சென்ற பாண்டியாவிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரது காயம் தீவிரமாக உள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து அவர் விளக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா அவருக்கு பதிலாக மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக நடைபெறும் தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடரில் ஹர்டிக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் பாண்டியாவின் காயம் குணமடைய இன்னும் இரண்டு மாதங்கள் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து பாண்டியா விலகினார். அதோடு மட்டுமின்றி அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : இம்முறையும் பவுண்டரி கவுண்ட் தானா? ஒருவேளை ஃபைனல் டை’யில் முடிந்தால் கோப்பை யாருக்கு? ஐசிசி ரூல்ஸ் இதோ
அந்த தொடரில் இருந்தும் பாண்டியா விலகியுள்ளார். இப்படி உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த வாய்ப்பை காயத்தால் தவறவிட்ட பாண்டியா அடுத்தடுத்து இரண்டு தொடர்களையும் தவறவிட்டு பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.