ஸ்லெட்ஜிங் செய்ய விருப்பம் இல்ல. அவங்கள மிரட்ட எங்களிடம் வேற பிளான் இருக்கு – கேப்டன் பாண்டியா கருத்து

Hardik Pandya
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜனவரி 3-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது.

IND vs SL

- Advertisement -

அதன்படி இன்று நடைபெற இருக்கும் இந்த முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரிடமும் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களுக்கு வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் களமிறங்குவதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்பாக பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா இந்த தொடர் குறித்தும் எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

Hardik Pandya

இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏற்கனவே ஆசிய கோப்பையில் இலங்கை அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் எண்ணமெல்லாம் எங்களிடம் இல்லை. இந்த தொடரில் நாங்கள் ஒரு முழுமையான அணியாக நல்ல கிரிக்கெட் தொடராக இந்த தொடரை மகிழ்ந்து விளையாட இருக்கிறோம்.

- Advertisement -

அவர்கள் இந்தியாவில் தான் விளையாடுகிறார்கள் என்பதை உணர வைத்து அவர்களுக்கு எதிராக நல்ல கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம். இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக இந்த தொடர்களில் நாங்கள் ஸ்லெட்ஜிங் எல்லாம் செய்ய மாட்டோம் எங்களது உடல் மொழியின் மூலமாகவே அவர்களை மிரட்டுவோம் என ஹார்டிக் பாண்டியா அதிரடியான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரிஷப் பண்டிற்கு இப்படி ஆனது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரோட இடத்தை நிரப்பப்போவது யார்? – பாண்டியா பேட்டி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலககோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாதான் செயல்படுவார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இந்த தொடரிலும் அவரது தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement