ரிஷப் பண்டிற்கு இப்படி ஆனது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவரோட இடத்தை நிரப்பப்போவது யார்? – பாண்டியா பேட்டி

Hardik-Pandya-and-Rishabh-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜனவரி 3-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ள வேளையில் இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இந்த பேட்டியில் காயமடைந்த ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு தகவல்களை அவர் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rishabh Pant

- Advertisement -

ரிஷப் பண்டிற்கு நடைபெற்ற இந்த விபத்து துரதிஷ்ட வசமான ஒன்று. அவருக்கு ஏற்பட்ட இந்த சூழ்நிலை என் மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்திய அணியில் பண்ட் எப்பொழுதுமே ஒரு முக்கியமான வீரர். ஆனால் அவர் இப்போது இருக்கும் சூழ்நிலை பற்றி அனைவருக்குமே தெரியும். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும், டி20 உலக கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ஆனால் தற்போது இந்த அனைத்து விடயங்களுமே சொதப்பலாக மாறியுள்ளது. ரிஷப் பண்ட் அணியில் தற்போது இல்லாததால் அவருக்கு பதிலாக பல இளம்வீரர்களுக்கு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பண்ட் போன்ற வீரர் அணியில் இருந்தால் நிச்சயம் அங்கு நடக்கும் ஒரு மேஜிக் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

Rishabh Pant

அவருக்கான மாற்று வீரர் யார் என்பதை இனிவரும் தொடர்களில் நிச்சயம் கண்டறிவோம். ஆனால் அவரைப் போன்ற வீரர் நிச்சயம் எங்கள் பிளானில் எப்பொழுதுமே இருப்பார் என்று ரிஷப் பண்ட் குறித்து ஹார்டிக் பாண்டியா பேசினார். மேலும் அவரது உடல்நிலை விரைவாக நல்ல நிலைக்குத் திரும்பி அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று தான் பிராத்திப்பதாகவும் ஹார்டிக் பாண்டியா கூறினார்.

- Advertisement -

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மும்பை அல்லது டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு சிகிச்சை பெற உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேமரூன் க்ரீன் பந்துவீச மாட்டார். கண்டிஷன் போட்ட ஆஸி நிர்வாகம் – ஏன் தெரியுமா?

ரிஷப் பண்டின் காயங்கள் ஆபத்தானவை இல்லை என்றாலும் அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப குறைந்தது ஐந்து முதல் ஆறு (5-6) மாதங்கள் வரை ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement