- Advertisement -
ஐ.பி.எல்

கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவர் வந்தா வெற்றி தான்.. ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு புகழாரம் சூட்டிய – ஹார்டிக் பாண்டியா

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அந்தப் போட்டியில் ஜூன் 1-ஆம் தேதி பங்கேற்க இருக்கிறது.

பும்ரா எப்போது பந்துவீச வேண்டும்? : பதிலளித்த பாண்டியா

நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 47 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே குவித்ததால் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் குவித்தனர்.

மும்பை அணி சார்பாக ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிச்சர்ட் கிளீசன், மிட்சல் சான்ட்னர், அஸ்வினி குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சிறப்பாக விளையாடி கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரை அவர் சரியான நேரத்தில் வீழ்த்தியதால் மும்பை அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஜஸ்ப்ரீத் பும்ரா எப்போது பந்துவீச வேண்டும் என்று நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்கள்? என மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாண்டியா கூறுகையில் :

இதையும் படிங்க : 15 க்கு 15 எல்லாமே கிளிக்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

ஜஸ்ப்ரீத் பும்ராவை உபயோகிப்பது மிகவும் சுலபமானது. போட்டி எப்போதெல்லாம் எங்களது கைமீறி செல்கிறது என்று உணர்கிறோமோ அப்போதெல்லாம் நான் ஜஸ்ப்ரீத் பும்ராவை அழைப்பேன். போட்டி நம்மிடம் இருந்து சற்று விலகினாலும் அவர் பந்துவீச வந்தால் வெற்றி நிச்சயம் என பும்ரா குறித்து ஹார்டிக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -