இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியானது நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
பின்னர் தொடர்ந்து விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 47 ரன்களையும் குவித்து அசத்தினர். குஜராத் அணி சார்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே குவித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டி என்பது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களம் இறங்கிய நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 33 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு சாதனையை முதல் நபராக சூரியகுமார் யாதவ் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த தொடரின் ஆரம்பப் போட்டியிலிருந்து 25+ ரன்களை குவித்து வரும் சூரியகுமார் யாதவ் தான் விளையாடிய 15-வது ஆட்டத்திலும் 25+ மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுப்மன் கில் செய்த இந்த தவறே குஜராத் தோல்விக்கு காரணம்.. இந்திய டெஸ்ட் கேப்டன் மீது உத்தப்பா அதிருப்தி
இதற்கடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது நாளை ஜூன் 1-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.



