சுப்மன் கில் செய்த இந்த தவறே குஜராத் தோல்விக்கு காரணம்.. இந்திய டெஸ்ட் கேப்டன் மீது உத்தப்பா அதிருப்தி

Robin Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது. அதனால் குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றது. குஜராத் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக ரோஹித் சர்மா 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய குஜராத் 20 ஓவரில் போராடி 208/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் சுதர்சன் 81, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சுப்மன் கில் தவறு:

இந்த தோல்விக்கு ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே கொடுத்த 2 கேட்ச்கள் உட்பட மொத்தம் 3 கேட்ச்களை தவற விட்டது காரணமானதாக குஜராத் கேப்டன் சுப்மன் கில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வருடம் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறந்த பவுலராக செயல்பட்டார்.

மேலும் இந்த வருடம் பெரும்பாலும் அவர் 7 – 15 வரையிலான மிடில் ஓவர்களில் பவுலிங் செய்தே நிறைய விக்கெட்டுகளை எடுத்தார். அப்படிப்பட்ட பிரசித் கிருஷ்ணாவை எலிமினேட்டரில் மிடில் ஓவர்களில் பயன்படுத்தாத சுப்மன் கில் பவர்பிளேவில் 2 ஓவர்களை வீச வைத்ததே தோல்விக்கு வித்திட்டதாக முன்னாள் வீரர் ராபின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய டெஸ்ட் கேப்டன் வேற:

“குஜராத்தின் திட்டங்கள் செயலூக்கத்தை விட வினைத்திறனாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில் தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேவில் பயன்படுத்தியது தவறான நடவடிக்கை. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா டி20 கிரிக்கெட்டின் ஃசீட் கோட்.. அவங்களை சிறப்பாக்கும் ஹீரோ.. அஸ்வின் பாராட்டு

“அதையும் குஜராத் செய்யத் தவறி விட்டனர். அந்த 2 ஓவரில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இது போக அவர்களுடைய ஃபீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்ச்களை தவற விட்ட நீங்கள் கோப்பையை வெல்லலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது” எனக் கூறினார். மொத்தத்தில் அழுத்தமான எலிமினேட்டரில் பேட்டிங்கில் 1 ரன் மட்டுமே எடுத்து கேப்டனாகவும் சொதப்பிய சுப்மன் கில் அடுத்ததாக இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தப் போவது ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement