ஜஸ்ப்ரித் பும்ரா டி20 கிரிக்கெட்டின் ஃசீட் கோட்.. அவங்களை சிறப்பாக்கும் ஹீரோ.. அஸ்வின் பாராட்டு

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் ஃகுவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றது. முள்ளான்பூரில் மே 30ஆம் தேதியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய கேப்டன் கில் 1 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 20 (10) ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்போது 14வது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா துல்லியமான யார்க்கர் பந்தால் வாஷிங்டன் சுந்தரை 48 (24) ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

பும்ரா எனும் ஃசீட் கோட்:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் விளையாடிய சாய் சுதர்சனும் 81 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ரூதர்போர்ட் 24, ஷாருக்கான் 13, ராகுல் திவாடியா 16* ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் 20 ஓவரில் 208/6 ரன்களை மட்டுமே எடுத்த குஜராத் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 கிரிக்கெட்டின் ஃசீட் கோட் (ஏமாற்று குறியீடு) என்று ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். முக்கிய நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுக்கும் பும்ரா தம்முடைய கேப்டனாக வெற்றி பெறச் செய்து சிறப்பாக மாற்றுவதாகவும் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா அந்த ஓவரை போடாமல் இருந்திருந்தால் போட்டி இன்னும் ஆழமாக சென்றிருக்கும்”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“12, 13, 14 ரன்ரேட் தேவைப்பட்ட போது கடைசி 2 ஓவரில் அவர் 7 – 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். ராகுல் திவாடியா அவருக்கு எதிராக சிக்சர் அடித்தார். அதையும் தாண்டி கடைசி 2 பந்தில் 1 ரன் கொடுத்ததே பும்ராவின் தரத்தை வரையறுக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பையின் போது பும்ரா 20 ஓவர் கிரிக்கெட்டின் சீட் கோட் என்று நான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்”

இதையும் படிங்க: 35 சிக்ஸ்.. நொறுக்கப்பட்ட உலகின் நம்பர் டி20 பவுலருக்கு இந்த நிலையா? சிராஜை முந்தி ரசித் மோசமான சாதனை

“என்ஃஎப்எஸ் போன்ற ஆன்லைன் விளையாட்டை நீங்கள் விளையாடியிருந்தால் அது பற்றி தெரியும். அது போன்ற விளையாட்டுக்களில் அந்த குறியீடுகளை போட்டால் நீங்கள் வேகமாக பயணித்து மற்றவர்களை வீழ்த்தலாம். அதே போல இன்றைய உலக கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு கேப்டனை உண்மையாக இருப்பதை விட சிறந்தவராக காட்சிப்படுத்துகிறார். யார்கர், ஸ்லோயர் பந்துகளை அவர் பயன்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement