ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் மே 30ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய குஜராத் 20 ஓவரில் முடிந்தளவு போராடியும் 208/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 80, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தனர்.
நொறுக்கப்பட்ட ரசித் கான்:
மும்பைக்கு ட்ரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியால் குஜராத் அணி தொடரிலிருந்து வெளியேறியது. அந்த அணியின் இந்த தோல்விக்கு பௌலிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசித் கான் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமானது. கடந்த பல வருடங்களாக அனைத்து வகையான லீக் தொடர்களிலும் விளையாடும் அவர் துல்லியமாக பௌலிங் செய்து டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுத்து வருகிறார்.
மேலும் குறைந்த ரன்களை கொடுத்து முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமைக் கொண்ட அவர் தம்முடைய அணிகளின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதனாலேயே மேட்ச் வின்னராக அறியப்படும் அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராகவும் போற்றப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட ரசித் கான் 2025 ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே துல்லியமாக பவுலிங் செய்யத் தடுமாறினார்.
மோசமான சாதனை:
அதைப் பயன்படுத்திய எதிரணி பேட்ஸ்மேன்கள் பல போட்டிகளில் அவரை அடித்து நொறுக்கினார்கள். அதனால் இந்த வருடம் 15 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 9 விக்கெட்டுகளை 9.25 என்ற எக்கனாமியில் மட்டுமே எடுத்தார். அதை விட இந்த 15 போட்டிகளில் அவர் 33 சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 23 வயசில் இப்படி ஒரு சாதனையா? வியக்க வைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் – விவரம் இதோ
இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை ரசித் கான் படைத்துள்ளார். இதற்கு முன் 2022 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய முகமது சிராஜ் 31 சிக்ஸர்கள் வழங்கியதே முந்தைய சாதனை. இதை அறியும் ரசிகர்கள் ரசித் கானுக்கே இந்த நிலையா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.



