23 வயசில் இப்படி ஒரு சாதனையா? வியக்க வைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் – விவரம் இதோ

Sai Sudharsan
- Advertisement -

தமிழக இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வந்த அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் ஆரஞ்சு தொப்பியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

சாய் சுதர்சன் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் சாய் சுதர்சனின் ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் இந்த போட்டியின் போது 229 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கை துரத்திய குஜராத் அணியின் சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 80 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் நேற்று அடித்த 80 ரன்களுடன் சேர்த்து அவர் மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 80 ரன்களோடு சேர்த்து இந்த தொடரில் 759 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாகவே ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களாக விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்திலும், சுப்மன் கில் 890 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். இவ்வேளையில் அவர்கள் இருவருக்கு அடுத்து தற்போது சாய் சுதர்சன் இந்த சீசனில் அடித்த 759 ரன்கள் மூலம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : மும்பை வீட்டுமனை மாதிரி.. குஜராத்தை சாய்க்க பும்ரா தான் ஹெல்ப் பண்ணாரு.. கேப்டன் பாண்டியா பாராட்டு

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 700 ரன்களுக்கு மேல் இளம் வயதில் அடித்த வீரராகவும் சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார். தனது 23-வது வயதில் இந்த ஆண்டு அவர் 700 ரன்கள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement