IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோரை பின்னுக்கு தள்ளிய – ஹார்டிக் பாண்டியா

Hardik-Bumrah-Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. மேலும் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்திய அணி இந்த டி20 தொடரை இழந்து விடும் என்பதனால் தற்போது ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த இரண்டாவது டி20 போட்டியின் போது பாண்டியா எடுத்த சில முடிவுகள் போட்டியில் பாதகமாக அமைந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாண்டியா போட்டியின் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதோடு மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவலையும் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

மொத்தம் 4 ஓவர்கள் பந்துவீசிய ஹார்டிக் பாண்டியா 35 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முக்கியமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.

அந்த வகையில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் சாஹல் 95 விக்கெட்டுகளுடன் இடம் முதலிடத்திலும், புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்த வேளையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு முன்னதாக அஸ்வின் 72 விக்கெட்டுகளுடனும், ஜஸ்ப்ரீத் பும்ரா 70 விக்கெட்டுகளுடனும் இருந்த வேளையில் அவர்கள் இருவரையும் ஒரே போட்டியில் கடந்து தற்போது பாண்டியா 73 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பாண்டியாவிற்கு அடுத்து அஸ்வின் 72 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், பும்ரா 70 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : 2023 உ.கோ : மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க ரோஹித் மாதிரி திறமை கொண்ட அவர் சரியாக இருப்பாரு – இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

மேலும் இந்த தொடரில் மூன்று போட்டிகள் இருப்பதால் இன்னும் பாண்டியா இந்த பட்டியலில் முன்னேற்றத்தை காணவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement