- Advertisement -
ஐ.பி.எல்

மும்பை வீட்டுமனை மாதிரி.. குஜராத்தை சாய்க்க பும்ரா தான் ஹெல்ப் பண்ணாரு.. கேப்டன் பாண்டியா பாராட்டு

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 30ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டரில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றது. முள்ளான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக ரோஹித் சர்மா 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய குஜராத் 20 ஓவரில் கடினமாகப் போராடியும் 208/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 80, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

விலைமிக்க பும்ரா:

குறிப்பாக அந்த இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வாஷிங்டன் சுந்தரை துல்லியமான யார்கர் யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கிய பும்ரா வெற்றிக்கு வித்திட்டார். மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்நிலையில் போட்டி கை மீறும் போது பந்தை கொடுத்தால் பும்ரா விக்கெட்டை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மும்பையில் அதிக விலைக்கு விற்கும் வீட்டுமனைகளை போல மதிப்புமிக்க பும்ராவை வைத்து இப்போட்டியில் வென்றது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கட்டத்தில் வெற்றி இரு அணிகளுக்கும் சமமாக இருந்தது”

- Advertisement -

பாண்டியா பாராட்டு:

“பிட்ச் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு அதிக உதவி செய்தது என்று நினைக்கிறேன். எங்கள் அணிக்காக அறிமுகமான ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி போட்டியைத் துவக்கினார். ரோஹித் சர்மா நேரத்தை எடுத்துக் கொண்டாலும் சிறப்பாக செயல்பட்டார். இது போன்ற முக்கியமான போட்டிகளில் அது போன்ற விளிம்புகள் வெற்றிக்கு உதவும். பும்ராவை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது மிகவும் எளிது”

இதையும் படிங்க: குஜராத் அணிக்காக இந்த வருஷம் அவர் எதுவுமே பண்ணல.. அவர் இருப்பதே வேஸ்ட் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“அதாவது போட்டி உங்களுடைய கையை விட்டு செல்வதாக நீங்கள் உணரும் போது அவரை கொண்டு வாருங்கள். இது மும்பையில் விற்கும் வீட்டுமனை விலைகள் போன்றது. பும்ரா அந்தளவுக்கு விலைமிக்கவர். அவரிடம் பந்தை கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது. அதே சமயம் கடைசி நேரத்தில் அவர் வந்து பவுலிங் செய்வதற்கு நாங்கள் பேட்டிங்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்களை எடுப்பது முக்கியம். கடைசியில் பும்ரா அந்த முக்கியமான ஓவரை வீசினால் வெற்றிக்கான விளிம்பு அதிகரிக்கும். தோல்வியிலிருந்து மீண்டு வருவது மிகவும் முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -