சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தாங்கள் விளையாடிய 14 லீக் போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகள் என 18 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கான எலுமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
குஜராத் அணியில் அவர் இருப்பது வேஸ்ட் : ஆகாஷ் சோப்ரா
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் காரணமாக அடுத்ததாக இரண்டாவது குவாலிபர் போட்டியில் மும்பை அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் அந்த அணியை சேர்ந்த ராகுல் திவாதியா இதுவரை அந்த அணிக்காக எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் வழங்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதேபோன்று பந்து வீச்சிலும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் சாய் கிஷார் என அனைவரும் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று மிடில் ஆர்டரில் ரூதர்போர்டு, ஷாருக் கான் ஆகியோர் ரன் குவித்தாலும் பின் வரிசையில் பினிஷராக களமிறங்கும் ராகுல் திவாதியா இந்த தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் அந்த அணிக்காக ஏற்படுத்தவில்லை. அதேபோன்று இந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் வெறும் 83 ரன்களை மட்டுமே குவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சுதர்சன் அசத்திட்டாரு.. சுந்தருக்கு இதான் மெசேஜ்.. இந்த தப்பை செஞ்சா யாராலும் ஜெய்க்க முடியாது.. கில் வருத்தம்
மேலும் ஜாஸ் பட்லர் தற்போது குஜராத் அணியிலிருந்து வெளியேறினாலும் அணுவும் வாய்ந்த இலங்கை வீரரான குசால் மெண்டிஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது அந்த அணிக்கு பலம் தான் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



