சுதர்சன் அசத்திட்டாரு.. சுந்தருக்கு இதான் மெசேஜ்.. இந்த தப்பை செஞ்சா யாராலும் ஜெய்க்க முடியாது.. கில் வருத்தம்

Shubman gill 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி மே 30ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற குஜராத் தொடரிலிருந்து வெளியேறியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்களை எடுத்தார்கள்.

குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மீண்டும் அபாரமாக விளையாடி 80 (49) ரன்கள் குவித்து போராடினார். அதே போல மிடில் ஆர்டரில் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 48 (24) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

குஜராத் தோல்வி:

ஆனால் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 208/6 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் தொடரிலிருந்து வெளியேறியது. அதனால் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்ற மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் தங்களைப் போல 3 கேட்ச்களை தவற விட்டால் எந்த போட்டியையும் எந்த அணியும் வெல்ல முடியாது என குஜராத் கேப்டன் கில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது கிரிக்கெட்டின் மிகச்சிறந்த போட்டி. நாங்கள் போராட்டத்தில் இருந்தோம். கடைசி 3 – 4 ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இருப்பினும் இது நல்ல போட்டியாகவே இருந்தது. கண்டிப்பாக 3 எளிதான கேட்ச்களை தவற விட்டால் வெற்றி பெறுவது எளிது கிடையாது. நீங்கள் 3 கேட்ச்களை தவற விடும் போது பவுலர்களும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது எளிது கிடையாது”

- Advertisement -

தோல்வியை கொடுத்த கேட்ச்கள்:

“சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு எங்களுடைய மெசேஜ் எளிது. அதாவது நீங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டை விளையாடி அணியை வெற்றி பெற வையுங்கள் என்பதே இலக்காக இருக்க வேண்டும். பனி காரணமாக பிட்ச் எங்களுக்கு கொஞ்சம் எளிதாக அமைந்தது. இந்த வருடம் எங்களுக்கு நிறைய நேர்முறையான விஷயங்கள் கிடைத்தன”

இதையும் படிங்க: இந்த ஆட்டநாயகன் விருதுக்கு குஜராத் தான் மெய்ன் காரணம்.. இதெல்லாம் பத்தாது.. ரோஹித் பேட்டி

“கடந்த 2 – 3 போட்டிகள் எங்களுடைய வழியில் செல்லவில்லை. ஆனால் எங்களுடைய வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக சாய் சுதர்சன் இந்த வருடம் எங்களுக்காக அற்புதமாக விளையாடினார். இந்த பிட்ச்சில் 210 ரன்கள் தான் சேசிங் செய்வதற்கு தகுந்த சராசரியான இலக்காகும்” என்று கூறினார்.

Advertisement