- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1 விக்கெட் போதும்.. 3 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஹார்டிக் பாண்டியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி இப்படி ஒரு மாபெரும் வெற்றியை பெறுவதற்கு முக்கிய காரணமாக நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

3 ஆவது இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா நிகழ்த்த இருக்கும் சாதனை :

ஏனெனில் ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய பாண்டியா அதன்பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்ட பின்னர் தற்போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அப்படி கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே 28 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 59 ரன்கள் குவித்து அசத்தியது மட்டுமின்றி பந்து வீச்சிலும் 2 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 116 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

இதையும் படிங்க : சொந்த மண்ணில் விளையாடவுள்ள 3 பஞ்சாப் வீரர்கள்.. எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள – இரண்டாவது டி20 போட்டி

அப்படி அவர் மேலும் 1 விக்கெட்டை அடுத்த போட்டியில் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஏற்கனவே அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் இந்திய அணிக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள வேளையில் மூன்றாவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்த ஹார்டிக் பாண்டியாவுக்கு பொன்னான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -