இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சொந்த மண்ணில் விளையாடயிருக்கும் 3 இந்திய வீரர்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டிசம்பர் 11-ஆம் தேதி சண்டிகார் மாநிலத்தில் உள்ள முல்லான்பூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்திய அணி முனைப்பு காட்டும். இதன் காரணமாக இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதேவேளையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் வகையில் தென்னாப்பிரிக்க அணியும் தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது டி20 போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ள வேளையில் போட்டி நடைபெற இருக்கும் முள்ளான்பூர் மைதானம் 3 பஞ்சாப் வீரர்களுக்கு சொந்த மைதானம் என்பதனால் கூடுதல் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.
அதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆகியோரும் பஞ்சாப் தான் என்பதனால் மொத்தம் மூன்று வீரர்கள் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட இருக்கின்றனர். பேட்டிங்கை பொருத்த வரை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாகவும், பந்துவீச்சை பொருத்தவரை அர்ஷ்தீப் சிங் துவக்க ஓவர்களை வீசுவார் என்பதனால் மூன்று நட்சத்திர வீரர்கள் அவர்களது சொந்த மைதானத்தில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்திய திலக் வர்மா – விவரம் இதோ
இளம் வீரர்களான இம்மூவரையும் தங்களது சொந்த மைதானத்திற்கு வரவேற்கும் வகையில் அம்மாநில கிரிக்கெட் வாரியம் பெரிய பதாகைகளை வைத்து மேலும் அவர்களை சிறப்பாக வரவேற்க தடபுடலாக அவர்களை வரவேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



