டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரீத் பும்ராவையே ஓரங்கட்டவுள்ள ஹார்டிக் பாண்டியா – சாதனை விவரம் இதோ

Bumrah-and-Pandya
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த இரண்டு தொடர்களுக்கு அடுத்து தற்போது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று கயானா நகரில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடயிருக்கும் இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் (93 விக்கெட்டுகள்) முதலிடத்திலும், புவனேஸ்வர் குமார் (90 விக்கெட்டுகள்) இரண்டாவது இடத்திலும், அஸ்வின் (72 விக்கெட்டுகள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

அதேவேளையில் நான்காவது இடத்தில் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் 70 விக்கெட்டுகளுடன் சமநிலையில் உள்ள வேளையில் இன்றைய போட்டியில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் பாண்டியா பும்ராவை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக நான்காவது இடத்திற்கு முன்னேறுவார். அதுமட்டுமின்றி மேலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் அதாவது இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினால் அஸ்வினையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : இதெல்லாம் தோல்வியே இல்ல ஃப்ரீயா விடுங்க, ஆனா 2வது போட்டியில் அவங்க தான் காப்பாத்தணும் – அபினவ் முகுந்த் பேட்டி

இதுவரை இந்திய அணிக்காக 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்டிக் பாண்டியா 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று பும்ரா 60 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement