நெட் பிராக்டீஸ்ஸ ஸ்டார்ட் பண்ணிட்டாரு. ஆனாலும் இன்னும் லேட் ஆகுமாம் – ஹார்டிக் பாண்டியா குறித்து வெளியான தகவல்

Hardik-Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். அதன்படி இந்த உலகக் கோப்பை தொடரில் ஆரம்பகட்ட போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது பாண்டியா அணியில் முக்கிய பங்களிப்பினையும் வழங்கி இருந்தார்.

ஆனால் அக்டோபர் 19-ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவர் பந்துவீசுகையில் காயமடைந்தார். இதன் காரணமாக அந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறிய ஹார்டிக் பாண்டியா அதன் பிறகு அக்டோபர் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை தவறவிட்டார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அக்டோபர் 29-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியையும் தவறவிட்டார். அவர் அணியிலிருந்து வெளியேறியதன் காரணமாக அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் கூடுதல் பேட்ஸ்மேனாக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து விலகிய ஹார்திக் பாண்டியா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வரும் வேளையில் அவர் எப்பொழுது கம்பேக் கொடுப்பார் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது பாண்டியாவின் உடற்தகுதி குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளை தவறவிட்ட ஹார்டிக் பாண்டியா அடுத்ததாக இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியையும் தவற விட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் அவர் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கை காரணமாக அவரை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : எந்தவொரு வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையை படைத்து அசத்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

எனவே அவர் எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் பங்கேற்காமல் நேரடியாக அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தற்போதைய நிலையில் இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள வேளையில் எஞ்சிய லீக் போட்டிகளில் அவரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத நிர்வாகம் நேரடியாக அரையிறுதி போட்டியிலேயே விளையாட வைக்கவே விரும்புவதாகவும் தெரிகிறது.

Advertisement