காயமடைந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் இணைவதில் ஏற்பட்டுள்ள தாமதம் – எப்போ ரிட்டர்ன்?

Pandya
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அடுத்ததாக இந்திய அணி வரும் அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா மீண்டும் அணியில் எப்போது இணைவார் என்ற கேள்வியே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 17-வது லீக் போட்டியின் போது கால் பகுதியில் காயமடைந்த ஹார்டிக் பாண்டியா அந்த போட்டியின் எஞ்சிய இன்னிங்சில் இருந்து வெளியேறினார். அதன் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கு போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரராக அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் விளையாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் ஆல்ரவுண்டர் பாண்டியா எப்பொழுது அணிக்கு திரும்புவார்? என்ற கேள்வியே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. அதன்படி காயம் காரணமாக வெளியேறிய பாண்டியா பெங்களூரு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொண்ட பாண்டியா நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது அவர் இந்திய அணியில் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோவில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், அதனை தொடர்ந்து நவம்பர் 2-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தான் அவர் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : இப்பவாச்சும் விராட் கோலி மாதிரி அந்த முடிவை எடுங்க.. பாபருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

இருப்பினும் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் பி.சி.சி.ஐ வெளியிடவில்லை. ஆனாலும் நிச்சயம் இது ஒரு உறுதியான தகவல் என்றே தெரிகிறது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நாக் அவுட் போட்டிகளில் நிச்சயம் ஹார்திக் பாண்டியா மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என்பதனால் அவர் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement