இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க இருக்கும் ஹார்டிக் பாண்டியா. அவர் வந்தா டீம்ல இருந்து – வெளியேறப்போவது யார்?

Pandya
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணியை எதிர்த்து எந்த ஒரு அணியுமே விளையாட பயப்படத்தான் செய்கிறது.

ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அணியானது அனைத்து துறைகளியும் பலம் வாய்ந்த வீரர்களை சரியான கலவையில் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணியானது இந்த லீக் சுற்று போட்டிகளில் அடுத்து நான்கு ஆட்டங்களில் மட்டுமே விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் அடுத்ததாக இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணி ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்துவிடும்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் காயம் அடைந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது அவரது காயம் எவ்வாறு உள்ளது? அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புகிறார்? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அடுத்ததாக அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் இந்திய அணியுடன் இணையும் ஹார்டிக் பாண்டியா அவர்களுடன் பயிற்சியையும் மேற்கொள்வார். அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி அணியிலிருந்து வெளியேறிய பாண்டியா பெங்களூரு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த பாண்டியா தற்போது ஒரு வார இடைவேளையில் அவர் நல்ல அளவில் முன்னேற்றம் பெற்றுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு முழுசா அவர்தான் காரணம். 4 வருஷமா அவரு ஒன்னும் கத்துக்கல – மொயின் கான் விளாசல்

இதனால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஒருவேளை அந்த போட்டிக்கு முன்னதாக அவர் ஏதேனும் அசவுகரித்தை சந்தித்தால் விளையாடாமல் போவாரே தவிர மற்றபடி அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது உறுதி. அப்படி பாண்டியா அணிக்குள் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இடம்பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement