வான்கடே மைதான ஊழியர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கிய ஹார்டிக் பாண்டியா – நெகிழவைத்த சம்பவம்

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் கடந்த 2024 மற்றும் 2026 என அடுத்தடுத்த டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணியாகவும், அதிகமுறை டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் இந்திய அணி சாதனை நிகழ்த்தியது.

மைதான ஊழியர்களுக்கு பரிசளித்த : ஹார்டிக் பாண்டியா

அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ஹர்திக் பாண்டியா மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு தங்க காசினையும் குறிப்பிட்ட பணத்தையும் பரிசாக அளித்துள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இதற்கு காரணம் யாதெனில் : 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான தீவிர பயிற்சியில் ஹார்திக் பாண்டியா ஈடுபட்டிருந்தபோது வான்கடே மைதானத்தின் ஊழியர்கள் நீண்ட இரவு பாராமல் அவருக்காக ஆடுகளத்தை தயார் செய்து கொடுத்தது மட்டுமின்றி பயிற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அருகில் இருந்து செய்திருக்கின்றனர்.

அந்த சமயத்தில் உலககோப்பை முடிந்ததும் உங்களுக்கு ஒரு சிறப்பு பரிசை வழங்குவேன் என ஹார்திக் பாண்டியா அந்த மைதான ஊழியர்களுக்கு வாக்களித்து இருந்தார். அப்படி அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் உலக கோப்பை முடிந்த கையோடு தற்போது ஐபிஎல் தொடருக்காக வான்கடே மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் ஹார்டிக் பாண்டியா மைதான ஊழியர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு ஒரு தங்க நாணயம் மற்றும் 10 லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க: கே.எல் ராகுலோடு சேர்த்து அந்த இலங்கை வீரரை ஓப்பனராக அனுப்புங்க – அஷ்வின் அட்வைஸ்

மேலும் இந்த விடயம் குறித்து ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : நான் கடினமாக உழைத்த போது என்னுடன் நின்றவர்கள் நீங்கள். எனவே இந்த வெற்றி உங்களுக்கும் உரியது என ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த சம்பவம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement