கே.எல் ராகுலோடு சேர்த்து அந்த இலங்கை வீரரை ஓப்பனராக அனுப்புங்க – அஷ்வின் அட்வைஸ்

Ashwin and Rahul
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது எப்படியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதியில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்த அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. இப்படி இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சறுக்கல் அந்த அணியின் நிர்வாகத்தினரிடமும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

டெல்லி அணியின் துவக்க வீரர்களாக இவர்களே ஆடனும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

இருந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இம்முறை 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளதால் நிச்சயம் அந்த அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் பதும் நிசாங்கா ஆகியோரை விளையாட வைக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

கடந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுல் துவக்க வீரராக அற்புதமாக விளையாடியிருந்தார். அந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய அவருக்கு அதன்பிறகு துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் பலமுறை பேட்டிங் ஆர்டரில் மாற்றம் ஏற்பட்டன. எனவே இம்முறை கே.எல் ராகுலுடன் நிசாங்காவை டெல்லி அணி துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும். அப்படி செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்டிடம் 4 மணிநேரம் பேசிய யுவ்ராஜ் சிங்.. இர்பான் பதான் பகிர்ந்த தகவல் – விவரம் இதோ

அதேபோன்று அஷுதோஷ் சர்மாவும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அவரையும் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும். மேலும் நிறைய மாற்றங்களை செய்யாமல் ஒரே அணியை தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் எனவும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement