இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராக இருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுலும், டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனும் அசத்தலாக விளையாடி வருவதால் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ரிஷப் பண்ட் இந்த வரிசையில் பேட்டிங் செய்யனும் : இர்பான் பதான்
அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்த அவர் அங்கிருந்து லக்னோ அணிக்கு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வந்தாலும் லக்னோ அணியிலும் அவரது கேப்டன்சி பெரியளவில் பிரகாசிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரது பேட்டிங்கும் மோசமாக இருந்து வருகிறது. இருந்தாலும் நட்சத்திர வீரரான அவரே இந்த ஆண்டும் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங்கை சந்தித்து அவரிடம் ஸ்பெஷல் பயிற்சி மேற்கொண்டு இருந்ததாக பல தகவல்கள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரிஷப் பண்ட் யுவராஜ் சிங்கிடம் என்ன பயிற்சியை செய்தார்? என்பது குறித்து பேசிய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
என்னை பொருத்தவரை ரிஷப் பண்ட் 3 ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் மூன்றாவது இடத்தை நிக்கோலஸ் பூரானுக்காக விட்டுக் கொடுத்த அவர் பின்வரிசையில் வந்து விளையாடுகிறார். என்னை பொறுத்தவரை அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தால் தான் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும். யுவராஜ் சிங்கிடம் ரிஷப் பண்ட் இணைந்து பேட்டிங் பயிற்சி செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : தோனியின் இந்த பயணம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் பெரிய ஊக்கமாக இருக்கும் – சவுரவ் கங்குலி பேச்சு
அதன்பிறகு நான் யுவராஜ் சிங்கிடம் பேசினேன். ரிஷப் பண்டிடம் என்ன மாற்றங்களை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு : தொழில்நுட்ப ரீதியாக எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்றும் மனரீதியாக அவருக்கு மாற்றம் தேவைப்பட்டதால் நான்கு மணி நேரம் அமர்ந்து ஆலோசனைகளை வழங்கியதாக யுவராஜ் சிங் என்னிடம் கூறினார். இந்தமுறை ரிஷப் பண்ட் பார்மிற்கு வந்துவிடுவார் என்று தான் நினைப்பதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



