தோனியின் இந்த பயணம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் பெரிய ஊக்கமாக இருக்கும் – சவுரவ் கங்குலி பேச்சு

Ganguly and Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு வரை 350 ஒருநாள் போட்டிகள் 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி 3 ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு கேப்டனாக வென்று கொடுத்த வீரராகவும் திகழ்கிறார்.

தோனியின் வளர்ச்சி இளைஞர்களை ஊக்குவிக்கும் : சவுரவ் கங்குலி

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டே அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அதற்கு அடுத்து தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 44 வயதாகும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தோனி வளர்ந்து வந்த விதம் குறித்து சில கருத்துக்களை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜார்கண்ட் என்கிற மாநிலத்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்த தோனி இன்று உலக அளவில் லெஜெண்டாக உயர்ந்து இருப்பதை பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தோனி சாதித்திருக்கும்போது நாமும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர் இளைஞர்கள் மத்தியில் விதைத்திருக்கிறார். நானும் மேற்கு வங்கத்திலிருந்து வந்தவன் தான். அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பது எனக்கும் தெரியும். முன்பெல்லாம் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இருந்து தான் வீரர்கள் வருவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல.. இந்தமுறை கப் எங்களுக்கு தான் – சுப்மன் கில் பேட்டி

ஆனால் அந்த மரபை தோனி மாற்றினார். தோனிக்கு பிறகு பல இளைஞர்கள் எந்த நகரத்தில் இருந்தாலும் திறமையுடன் இருந்தால் சாதிக்கலாம் என்பதை உணர்ந்து முன்னேறி வருகிறார்கள் என்றும் சௌரவ் கங்குலி தோனியின் கிரிக்கெட் பயணத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement