வெஸ்ட் இண்டீஸ் வீரரின் அர்பணிப்பால் ஹார்டிக் பாண்டியவை வெளுத்து வாங்கும் இந்திய ரசிகர்கள் – விவரம் இதோ

Shamar-and-Hardik
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவதாக காபா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியை ஜெயித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரரான ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் அவர் பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வீசிய பந்து அவரது காலை பதம் பார்த்தது. இதன் காரணமாக கடுமையான வலியை உணர்ந்த அவர் மைதானத்தில் இருந்து நடக்க முடியாமல் வெளியேறிய வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்து வீசமாட்டார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் எனது கால் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நான் பந்து வீச தயாராக இருக்கிறேன் எனவே கடைசி விக்கெட் விழும் வரை என்னை பந்து வீச அனுமதிக்க வேண்டும் என்று அணியின் கேப்டனிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த வகையிலேயே தான் சொன்னது போலவே இறுதிவரை களத்தில் நின்று 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சூப்பர் ஸ்டாராகவும் அவர் மாறியுள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அதே வேளையில் இப்படி கடுமையான காயத்தை சந்தித்தும் வெற்றியை விட்டுக் கொடுக்க கூடாது என்று போராடிய ஷமர் ஜோசப்பை பார்த்து ஹார்டிக் பாண்டியா அர்ப்பணிப்பு உணர்வை கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் பாண்டியா இந்திய அணி வெற்றிபெற வேண்டிய முக்கிய தொடர்களில் காயமடைந்து வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது. அதிலும் குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது பந்துவீசுகையில் சறுக்கி விழுந்த ஹார்டிக் பாண்டியா அந்த போட்டியில் இருந்து வெளியேறிய பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காகவே உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு அதைப்பற்றி ஒன்னுமே தெரியல.. நீங்கல்லாம் வார்னே ஆகமுடியாது.. இந்தியாவை விமர்சித்த மைக்கேல் வாகன்

அவரது காயம் எல்லாம் நிச்சயம் ஒன்று இரண்டு போட்டியில் ஓய்வு பெற்றால் கூட சரியாக கூடிய ஒன்றுதான். ஆனால் எதற்காக பாண்டியா இப்படி தொடர்ச்சியாக உடற்தகுதியை கணக்கில் காட்டி அடிக்கடி அணியில் இருந்து விலகுகிறார் என்று புரியவில்லை என்றும் ஹார்திக் பாண்டியா போன்ற வீரர் அணியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிந்தும் அடிக்கடி காயத்தை காரணம் காட்டி விலகுவது தவறு என்றும் ரசிகர்கள் அவரை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement