ரோஹித்துக்கு அதைப்பற்றி ஒன்னுமே தெரியல.. நீங்கல்லாம் வார்னே ஆகமுடியாது.. இந்தியாவை விமர்சித்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan 3
- Advertisement -

ஹைதராபாத் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை சேசிங் செய்த இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அதன் வாயிலாக தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலை பெற்றும் இந்தியா முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் அவமான தோல்வியை சந்தித்துள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாடி உங்களை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைப்போம் என்று இந்தியாவை எச்சரித்திருந்த இங்கிலாந்து அதை முதல் போட்டியிலேயே செய்து காட்டியுள்ளது.

- Advertisement -

சுமாரான ரோஹித்:
இந்நிலையில் இப்போட்டியில் 2வது இன்னிங்சில் 164/5 என சரிந்த இங்கிலாந்து 420 ரன்கள் அடிக்கும் அளவுக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். குறிப்பாக அழுத்தமான நேரத்தில் ஃபீல்டர்களை மாற்றி விக்கெட்டுகளை எடுக்கும் யுக்தி ரோகித்துக்கு தெரியவில்லை என்று தெரிவிக்கும் அவர் ஷேன் வார்னே போல இந்திய ஸ்பின்னர்கள் ஓலி போப்பை சாய்க்க தவறியதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். அவர் மிகவும் எதிர்வினையாற்றுகிறார் என்று நான் நினைத்தேன். குறிப்பாக களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“அதிலும் குறிப்பாக ஓலி போப் அடித்த ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை நிறுத்துவதற்கு அவரிடம் பதில் இல்லை. ஒரு வீரர் லெக் சைட் திசையில் ஸ்வீப் அடிக்கும் போது வரலாற்றின் மகத்தான ஸ்பின்னர் ஷேன் வார்னே அரௌண்ட் தி விக்கெட் திசையில் சென்று வாழ்த்துக்களுடன் அவுட்டாக்க முயற்சிப்பார். ஆனால் அப்படி இந்திய அணியிலிருந்து யாரும் முயற்சித்ததை நான் பார்க்கவில்லை”

இதையும் படிங்க: தப்பே இல்லாம செய்வாங்கன்னு எதிர்பாக்கல.. அதை வெச்சே.. பஸ்பாலை அட்டாக் பண்ணுவோம்.. டிராவிட் பேட்டி

“அது இங்கிலாந்துக்கு மிகவும் எளிதாக அமைந்தது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து எளிதாக பவுண்டரிகள் அடித்தது. அப்போது ஃபீல்டர்களை பரவலாக நிறுத்திய ரோகித் சர்மா எங்களுடைய பவுலர்கள் சிறப்பான பந்துகளை வீசியும் அடி வாங்குகிறார்கள் என்பது போல் செயல்பட்டார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டிலாவது இந்தியா சிறப்பாக விளையாடி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement