தப்பே இல்லாம செய்வாங்கன்னு எதிர்பாக்கல.. அதை வெச்சே.. பஸ்பாலை அட்டாக் பண்ணுவோம்.. டிராவிட் பேட்டி

Rahul Dravid 6
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக துவங்கியுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அபாரமாக பேட்டிங் செய்த இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால் 2வது இன்னிங்சில் ஓலி போப் 196 ரன்கள் குவித்த உதவியுடன் இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவை டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் சாய்த்து 202 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்ததை இங்கிலாந்து செய்து காட்டத் துவங்கியுள்ளது.

- Advertisement -

பதிலடி கொடுப்போம்:
மறுபுறம் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 100க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றும் இந்தியா அவமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தினர் கொண்டாடும் பஸ்பால் எனும் அதிரடியான ஆட்டத்திற்கு அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை தொடர்ச்சியாக அடிக்கும் இங்கிலாந்தின் யுக்தியை முதல் போட்டியில் எதிர்பார்க்கவில்லை என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். எனவே அவர்களுடைய பாதையை பின்பற்றி அடுத்த போட்டிகளில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பஸ்பாலுக்கு திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும்”

- Advertisement -

“ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை தொடர்ச்சியாக தரமான ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்கள் அடித்ததை போல இதற்கு முன் பார்த்ததில்லை. அதை பயன்படுத்தி இதற்கு முன் சில அபாரமான இன்னிங்ஸ்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் தவறே செய்யாமல் வெற்றிகரமாக இப்படி விளையாடுவதை இப்போது தான் பார்க்கிறேன். நாங்கள் எங்கே பந்தை பிட்ச் செய்கிறோம் என்பதில் கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பதால் அதில் நாங்கள் வேலை செய்து வெற்றி காண்போம்”

இதையும் படிங்க: காயமடைந்த ஜடேஜா 2 ஆவது போட்டியில் விளையாடுவாரா? நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கோச் ராகுல் டிராவிட்

“எதிரணிகள் இப்படி எங்களுக்கு சவாலை கொடுப்பது இது முதல் முறையல்ல. ஆனால் எப்போதும் அந்த சவால்களை சமாளித்து கம்பேக் கொடுக்கக்கூடிய ஸ்பின்னர்கள் எங்களிடம் இருக்கின்றனர். எனவே 2வது போட்டியில் நாங்கள் திருப்பி அடிப்பது முக்கியம். அதில் நாங்கள் சில திட்டங்கள் மற்றும் வியூகங்களுடன் வர வேண்டும். குறிப்பாக ஓலி போப் எப்படி முதல் போட்டியில் எங்களை அடித்தார் என்பதை சற்று ஆராய்ந்து செயல்பட்டால் 2வது போட்டியில் அவர் எங்களுக்கு எதிராக தவறுகளை செய்வார்” என்று கூறினார்.

Advertisement