காயமடைந்த ஜடேஜா 2 ஆவது போட்டியில் விளையாடுவாரா? நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கோச் ராகுல் டிராவிட்

Jadeja-and-Dravid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியானது நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் முதல் இன்னிங்சில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இப்படி இங்கிலாந்து அணியிடம் சுரண்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இப்படி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த வருத்தம் ஒருபுறம் இருக்கும் வேளையில் தற்போது அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதன்படி நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஜடேஜா 20 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஸ்டோக்ஸ் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறியிருந்தார். அப்படி வெளியேறும் போது ஜடேஜா தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டபடியே வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த தசைப்பிடிப்பு காயமாக மாறியுள்ளதா என்பதற்காக அவர் ஸ்கேன் பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ராகுல் பயிற்சியாளர் ராகுல் டிராவிடம் ரவீந்திர ஜடேஜாவின் காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த டிராவிட் கூறுகையில் : உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை நான் ஜடேஜாவின் காயம் குறித்து பிசியோதெரபிஸ்டிடம் எதுவும் கேட்கவில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை. நான் அவர்களிடம் ஒரு முறை பேசிவிட்டு அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதை தெரிவிக்கிறேன் என டிராவிட் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து செஞ்சதை மிஸ் பண்ணிட்டோம்.. முதல் டெஸ்டில் இந்தியா தோற்க அது தான் காரணம்.. டிராவிட்

இப்படி டிராவிட் போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தாலும் இன்று காலை வெளியான தகவலின் படி ரவீந்திர ஜடேஜா தனக்கு ஏற்பட்டுள்ள தசைப்பிடிக்கு பின்னர் மும்பை பயணித்து ஸ்கேன் செய்ய இருக்கிறார் என்றும் அதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டியை தவறவிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement