இங்கிலாந்து செஞ்சதை மிஸ் பண்ணிட்டோம்.. முதல் டெஸ்டில் இந்தியா தோற்க அது தான் காரணம்.. டிராவிட்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2வது இன்னிங்ஸில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.

அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 100க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றும் இந்தியா பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மறுபுறம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியிலேயே வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
இந்நிலையில் இந்த போட்டியில் ஓலி போப் சதமடித்து 196 ரன்கள் குவித்து வெற்றியை பறித்ததாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மறுபுறம் இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் நல்ல துவக்கத்தை பெற்றும் சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டு எக்ஸ்ட்ரா ரன்கள் எடுக்க தவறியது தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

“எங்களுக்கு சதம் கிடைக்கவில்லை. எங்களுக்கு எந்த வீரரும் பெரிய சதம் அடிக்கவில்லை. எனவே ஏதோ ஒரு வழியில் முதல் இன்னிங்ஸில் 70, 80 ரன்களை தவற விட்டோம். ஏனெனில் 2வது இன்னிங்ஸ் எப்போதுமே சவாலானதாக இருக்கும். 2வது இன்னிங்ஸில் எப்போதும் 230 ரன்களை சேசிங் செய்வது கடினமாக இருக்கும். அல்லது அதை அனைத்து நேரங்களிலும் சேசிங் செய்ய முடியாது”

- Advertisement -

“பிட்ச் சுழன்ற போது போப் அபாரமான இன்னிங்ஸ் விளையாடி நாங்கள் சேசிங் செய்ய முடியாத அளவுக்கு தேவையான ரன்களை இங்கிலாந்துக்கு கொடுத்தார். என்னைப் பொறுத்த வரை அது தான் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 3வது நாளில் போப் விளையாடிய விதம் எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. கடினமான பிட்ச்சில் அவர் அதிக ரிஸ்க் கொண்ட ஷாட்டுகளை அடித்தார்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் முடிந்ததுமே மும்பைக்கு ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற இந்திய வீரர் – 2 ஆவது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகம்

“அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்க்கு சாதகமாக மைதானம் இருந்தும் நாங்கள் 70 ரன்களை எடுக்காமல் விட்டு விட்டோம். நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தவில்லை. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் யாரும் சதமடிக்கவில்லை. இருப்பினும் எங்களுடைய வீரர்கள் பலர் இன்னும் இளமையாக அனுபவமின்றி இருக்கின்றனர். எனவே இது அவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும்” என்று கூறினார். முன்னதாக இப்போட்டியில் ஜெய்ஸ்வால் 80, ராகுல் 86, ஜடேஜா 87 ரன்கள் அடித்தும் இந்தியாவுக்காக யாருமே சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement