முதல் டெஸ்ட் முடிந்ததுமே மும்பைக்கு ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற இந்திய வீரர் – 2 ஆவது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகம்

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தற்போது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏனெனில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் பந்துவீச்சில் ரன் ஓட முயற்சித்த ஜடேஜா தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜாவிற்கு அங்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

- Advertisement -

அந்த பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் தான் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும். மேலும் ரவீந்திர ஜடேஜாவிற்கு சாதாரண தசைப்பிடிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் இல்லையெனில் அவரது வருகை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த பஸ்பால் போதுமா? அப்படி நெனச்சீங்கன்னா 2 மடங்கு அடிவிழும்.. இந்தியாவை விளாசிய நாசர் ஹுசைன்

இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் 87 ரன்கள் அடித்த ஜடேஜா அதோடு சேர்த்து இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். ஒருவேளை அவர் இரண்டாவது போட்டியில் விளையாட முடியாமல் போனால் தரமான ஆல்ரவுண்டருக்கான இடம் இந்திய அணியில் வெற்றிடமாகவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement