இந்த பஸ்பால் போதுமா? அப்படி நெனச்சீங்கன்னா 2 மடங்கு அடிவிழும்.. இந்தியாவை விளாசிய நாசர் ஹுசைன்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக துவங்கியுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்து எச்சரித்தது. கடைசியில் அதை செய்து காட்டியுள்ள இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை விட 436 ரன்கள் குவித்த இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் முதல் 3 நாட்கள் முன்னிலையில் இருந்த இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் குவித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து கடைசியில் இந்தியாவை 231 ரன்கள் இலக்கை சேசிங் செய்யவிடாமல் தோற்கடித்தது.

- Advertisement -

இரு மடங்கு பதிலடி:
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறை வேலை செய்யாது என்று இந்தியர்கள் சந்தேகப்பட்டதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி சந்தேகப்படுபவர்களுக்கு இரு மடங்கு பதிலடி கொடுக்கும் குணத்தை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கொண்டுள்ளதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அதிரடியாக செயல்படுவோம் என்ற இங்கிலாந்து அணியின் பிடிவாதம் எனக்கு பிடிக்கிறது. எனவே நீங்கள் இங்கிலாந்தை சந்தேகப்பட்டால் அவர்கள் இன்னும் அதிக பிடிவாதமாக செயல்பட்டு இரு மடங்கு பதிலடி கொடுப்பார்கள். இந்த வெற்றியால் இன்னும் அவர்கள் தங்களுடைய அணுகுமுறையை அதிகமாக கடைபிடிக்கப் போகிறார்கள். குறிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் பின்தங்கிய நிலைமையை சந்தித்தாலும் தங்களுடைய வீரர்களுக்கு இங்கிலாந்து ஆதரவு கொடுக்கும்”

- Advertisement -

“இங்கிலாந்து தங்களுடன் யாரும் மோத முடியாத அணி என்பதை காண்பித்துள்ளது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் ஆட்சி செய்து 436 ரன்கள் அடித்தனர். சொல்லப்போனால் சுமாராக அவுட்டாகாமல் போயிருந்தால் அவர்கள் இன்னும் அதிக ரன்கள் அடித்திருக்கலாம். அவர்கள் கம்பேக் கொடுப்பார்கள். வரலாற்றில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்த தொடர் இங்கிலாந்துக்கு இன்னும் கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க: பேட்டிங்கில் அவரு.. பந்துவீச்சில் இவரு.. இரண்டே பேரால் தோல்வியை சந்தித்த இந்திய அணி – விவரம் இதோ

“ஆனால் பஸ்பால் இது போன்ற சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் என்பதை இங்கிலாந்து காண்பித்துள்ளது. எனவே இது இந்தியா எழுந்திருக்க வேண்டிய வெற்றியாகும்” என்று கூறினார். முன்னதாக வரலாற்றிலேயே தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றும் இப்போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement