பாண்டியா விஷயத்துல என்னதான் நடக்குது. அவரு இனிமே வேணாம் – பயிற்சி போட்டிக்கு பிறகு ரசிகர்கள் கோபம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது உலக கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் முதன்மை அணிகள் இன்னும் சில தினங்களில் மோத இருக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்து தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி போட்டிக்கு பிறகு இந்திய அணி 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோத இருக்கிறது.

IND

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நேற்று இந்திய அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 189 ரன்களை இந்திய அணி 19 ஓவர்களில் சேஸிங் செய்து அசத்தியது. ஆனாலும் இந்தப் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா குறித்து ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா ஐபிஎல் தொடரில் பந்து வீசுவதன் மூலம் t20 உலகக் கோப்பை தொடரிலும் பந்து வீசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் பாண்டியா பந்துவீசவில்லை இருப்பினும் நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pandya 1

உலக கோப்பை தொடரில் பந்து வீச வேண்டும் என்றால் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டிகளில் அவர் பந்து வீசியே ஆகவேண்டும். ஆனால் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் அவர் பந்து வீச வரவே இல்லை. மேலும் பேட்டிங்கில் வந்த அவர் பினிஷராகவே இறங்கினார். இதன் காரணமாக ரசிகர்கள் பாண்டியாவை வெறும் பேட்ஸ்மேனாக தான் தேர்வு செய்துள்ளீர்களா ? அவர் பந்துவீச மாட்டாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பை இந்திய அணி இதை பொறுத்தே முடிவு செய்யப்படும் – கோச் ரவி சாஸ்திரி பேட்டி

அவர் அணியில் இருப்பதற்கு ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்கலாம் என்று காட்டமாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பேட்டிங்கிலும் அவர் சரியான பார்மில் இல்லாததால் அவரது இடத்தை மாற்ற வேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தின் வாயிலாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement