உலகக்கோப்பை இந்திய அணி இதை பொறுத்தே முடிவு செய்யப்படும் – கோச் ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் ஓமன் நாட்டிலும் பயிற்சி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சி ஆட்டங்களில் தற்போது முன்னணி அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நேற்று இந்திய அணி மோதியது.

Shastri

- Advertisement -

இந்நிலையில் முதன்மை போட்டிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் அணித்தேர்வு எவ்வாறு அமையும் ? என்பது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வானது பணியின் தாக்கம் எப்படி இருக்கிறதோ ? அதைப்பொறுத்தே தேர்வு செய்யப்படும்.

மேலும் இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்வதா ? அல்லது இரண்டாவது பேட்டிங் செய்வதா ? என்பது பனி தாக்கம் குறித்து ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும். ஏனெனில் தற்போது இந்திய அணி விளையாட உள்ள அனைத்து ஆட்டங்களும் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடைபெற உள்ளன. இதன் காரணமாக மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

dhoni mentor 1

அதனைப் பொறுத்தே அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பதா ? அல்லது வேகப்பந்து வீச்சாளர் உடன் களமிறங்குவதா ? என்பது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்கள் அதிக அளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு அமையும் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய இளம்வீரர். இப்படியே ஆடுனா டீம் பிளேயிங் லெவன்ல – இடம் கன்பார்ம்

பயிற்சி ஆட்டத்தில் எல்லோரும் பந்து வீசலாம் எல்லோரும் பேட்டிங் செய்யலாம் என்பதால் எந்தெந்த வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் ? என்பதை பார்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது. விரைவில் ஆரம்பிக்க உள்ள இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement