பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய இளம்வீரர். இப்படியே ஆடுனா டீம் பிளேயிங் லெவன்ல – இடம் கன்பார்ம்

ind
- Advertisement -

இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்த கையோடு தற்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. பயிற்சி போட்டி தானே என்று விளையாடாமல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தினை நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தினார். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

INDvsENG

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக பேர்ஸ்டோ 49 ரன்களும், மொயின் அலி 43 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அளவில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக ராகுல் 24 பந்துகளில் 50 ரன்களையும், இஷான் கிஷன் 46 பந்துகளில் 20 ரன்கள் குவித்து விளாசினார்.

- Advertisement -

பின்னர் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ரிஷப் பண்ட் 29 ரன்களும், ஹார்திக் பாண்டியா 12 ரன்களும் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரி என 70 ரன்கள் குவித்து ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் தற்போது இந்திய அணியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Ishan

அது யாதெனில் ஏற்கனவே முதல் மூன்று இடங்களுக்கு ராகுல், ரோஹித், விராட்கோலி ஆகிய மூவரும் செட் ஆகிவிட்டதால் நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவை விளையாட வைப்பதா ? இஷான் கிஷனை விளையாட வைப்பதா ? என்ற குழப்பம் நீடிக்கிறது. நேற்றைய போட்டியில் இஷான் கிஷன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே வேளையில் சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிஷந்து வெளியேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தமிழக வீரர் அஷ்வினை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய இதுவே காரணம் – விராட் கோலி பேட்டி

இதன் காரணமாக பிளேயிங் லெவனில் யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டி நடைபெற இருக்கிறது. அந்த போட்டியிலும் இஷான் கிஷன் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அவருக்கு உலக கோப்பை பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

Advertisement