தமிழக வீரர் அஷ்வினை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய இதுவே காரணம் – விராட் கோலி பேட்டி

ashwin-2

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனை அடுத்து தற்போது ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர்ந்து அங்கு துவங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் முதன்மை போட்டிகள் இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியும் ஐபிஎல் தொடரை முடித்து தற்போது அங்கு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் ஏன் தேர்வு செய்தீர்கள் ? என்று கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த விராட் கோலி கூறுகையில் : அஷ்வின் திறமைக்கு கிடைத்த பரிசுதான் இந்த வாய்ப்பு. தொடர்ச்சியாக அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக தற்போது இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார். ஒரு கட்டத்தில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அணியில் திகழ்ந்த அஷ்வின் இடையில் சற்று தொய்வு ஏற்பட்டதன் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் தனது பவுலிங்கை மேம்படுத்தி அணியில் இணைந்துள்ளார்.

ashwin

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறுவதை நாம் கண்டு வருகிறோம். மேலும் எளிதில் ரன் குவிக்க முடியாத பவுலராகவும் அஷ்வின் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அஷ்வின் தனது தொடர்ச்சியான பந்துவீச்சினை சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாகவே தற்போது அவருக்கு டி0 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தமிழக வீரரான இவரே உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் – ரெய்னா நம்பிக்கை

அதுமட்டுமின்றி அணியில் ஒரு தரமான ஆஃப் ஸ்பின்னர் வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது அனுபவமும் அவரது திறமையும் அவர் அணியில் இடம்பிடிக்க காரணம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement