தமிழக வீரரான இவரே உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் – ரெய்னா நம்பிக்கை

Raina
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கிய உலக கோப்பை தொடரானது நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட கருத்துகள் முன்னாள் வீரர்களிடமிருந்து இந்திய அணி குறித்து வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பந்து வீச்சில் அசத்த போகும் வீரர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

IND

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பந்துவீச்சு இந்த தொடரில் நிச்சயம் சிறப்பாக அமைய இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் பந்துவீச்சு அட்டாக்கில் முக்கிய வீரராக தமிழக பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி திகழ்வார். ஏனெனில் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களின் தன்மை அவரைப்போன்ற மிஸ்டரி ஸ்பின்னர்கள் நிச்சயம் உதவும்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி இதுபோன்ற ஆடுகளங்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். இந்திய அணிக்காக 3 டி20 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தாலும் அவருக்கு அனுபவம் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். நிச்சயம் இந்திய அணியின் பந்துவீச்சில் அவரது இடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

Varun

அதே போன்று வேகப்பந்து வீச்சும் தற்போது பலமாகவே உள்ளது. புவனேஷ்வர் குமார் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்வார். அதுமட்டுமின்றி ஷர்துல் தாகூர் அணியில் இணைந்துள்ளது மேலும் கூடுதல் பலத்தை தந்துள்ளது. நிச்சயம் இந்திய இந்த தொடரில் இந்திய அணி தங்களது பந்துவீச்சின் மூலம் பெரிய சவால்களை முறியடிக்க காத்திருக்கிறது என்று ரெய்னா கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் தலைமையில் உருவான அற்புதம் இவர். இந்திய இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய – வீரேந்திர சேவாக்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஷர்துல் தாகூர் அணியில் இணைந்ததன் மூலம் நிச்சயம் இந்திய அணிக்கு கூடுதல் ஆப்ஷனும் கிடைக்கும். எனவே இந்திய அணி என்னைப் பொறுத்தவரை தற்போது பலமாகவே உள்ளது என்று கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக வருன் சக்ரவர்த்தி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement