தோனியின் தலைமையில் உருவான அற்புதம் இவர். இந்திய இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய – வீரேந்திர சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் தொடரில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திவரும் சென்னை அணியானது மீண்டும் ஒருமுறை தாங்கள் ஏன் சிறப்பான அணியாக இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் போட்டியோடு முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இம்முறை சிறப்பாக வந்து கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

csk 1

- Advertisement -

இந்த வெற்றிக்கு காரணமாக சென்னை அணியின் பேட்ஸ்மேன்களில் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் திகழ்ந்தாலும் பந்துவீச்சில் தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அசத்தினர். அதிலும் குறிப்பாக ஷர்துல் தாகூர் 15 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான வீரராக திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் கூட விக்கெட் இழப்பின்றி விளையாடி வந்த கொல்கத்தா அணியை 11 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி இறுதி போட்டியில் திருப்பத்தை தந்தார்.

இந்நிலையில் ஷர்துல் தாகூரின் இந்த சிறப்பான வளர்ச்சி குறித்து பேசியுள்ள சேவாக் கூறுகையில் : ஷர்துல் தாகூர் சிஎஸ்கே அணியில் இணைந்து தோனியின் கீழ் விளையாடியதால் மிகப்பெரிய பிளேயராக மாறியுள்ளார். அவரின் கிரிக்கெட் எதிர்காலம் தோனியால் மிகவும் செழிப்பாக மாறியுள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் இணையும் முன்னர் அவர் இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்தார்.

Thakur-1

ஆனால் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகிய பின்னர் அவரது கிரிக்கெட் பெரியார் மிகப் பிரகாசமாக மாறியது. கடந்த நான்கு ஐபிஎல்-லில் அவர் 55 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த சீசனிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்துள்ளார். எப்போது அவர் சென்னை அணியில் இணைந்தாரோ அப்போதிலிருந்தே அவரது எதிர்காலம் மாறியது என ஷர்துல் தாகூர் குறித்து புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : 4 பந்தில் 4 விக்கெட். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஐயர்லாந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் – குவியும் வாழ்த்து

சேவாக் கூறியது முற்றிலும் உண்மை தான். ஏனெனில் 2018ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமான தாகூர் அதே ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடினார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் விக்கெட் வீழ்த்துவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுத்து வருகிறார் என்பது நாம் கண்டதே. இனிவரும் காலங்களிலும் இந்திய அணிக்காக இவர் மிகச் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம்.

Advertisement