4 பந்தில் 4 விக்கெட். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஐயர்லாந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் – குவியும் வாழ்த்து

Campher
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அதிரடியாக சென்று வருகிறது. ஏற்கனவே வங்கதேச அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

campher 2

இந்த போட்டியில் அயர்லாந்து அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான கர்டிஸ் கேம்பர் என்பவர் டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர்களாக இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வீரர் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரசித் கான் மட்டுமே வீழ்த்தியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் 22 வயதான அயர்லாந்து அணியை சேர்ந்த கர்டிஸ் கேம்பர் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்காக டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

campher 1

இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி நிர்ணயித்த 107 ரன்களை 15.1 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐயர்லாந்து அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி இந்தியா திரும்பியதும் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா – சி.எஸ்.கே ஓனர் ஸ்ரீநிவாசன் பேட்டி

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கர்டிஸ் கேம்பரே தேர்வு செய்யப்பட்டார். 22 வயதான இந்த இளம் வீரரின் சிறப்பான சாதனைக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement