- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிராக கெத்து காட்டிய ஹார்டிக் பாண்டியா.. சர்வதேச கிரிக்கெட்டில் – நிகழ்த்திய அசத்தல் சாதனை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான மிக முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியானது நேற்று துபாய் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதோடு மட்டுமின்றி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஹார்டிக் பாண்டியா :

இந்திய அணி பெற்ற இந்த அசத்தலான வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான அணியையையும் எதிர்த்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை 241 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி வெகு எளிதாக 42.3 ஓவர்களிலேயே வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதலில் பந்து வீசிய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா 8 ஓவர்கள் வீசி வெறும் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக அமைந்தது. ஏனெனில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த துவக்க ஆட்டக்காரரான பாபர் அசா0மை முதல் விக்கெட்டாக வீழ்த்திய அவர் அதற்கடுத்து பாகிஸ்தான் அணி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த போது சவுத் ஷாகிளையும் வீழ்த்தினார். அவர் எடுத்த இரண்டு இந்த இரண்டு விக்கெட்டுகளும் பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பை உடைக்கும் விதமாக மாறியது.

- Advertisement -

அதோடு சேர்த்து இந்த இரண்டு விக்கெட்டுகளின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். பந்துவீச்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஐந்தாவது வீரராக களமிறங்கிய பாண்டியா பேட்டிங்கிலும் அதிரடி காட்டியிருந்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – குல்தீப் யாதவ்

தற்போதைய இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக அனுபவமற்ற ஹர்ஷித் ராணா இடம்பெற்று விளையாடி வரும் வேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்டிக் பாண்டியா அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது இந்திய அணியின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -