பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – குல்தீப் யாதவ்

Kuldeep
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி இந்த தொடரின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

குல்தீப் யாதவ் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக சவுத் ஷாகில் 62 ரன்களையும், ரிஸ்வான் 46 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ரகள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது ஒன்பது ஓவர்களை வீசிய அவர் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளோடு சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று வகையான வடிவத்திலும் சேர்த்து 300 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக கோலி இதை செஞ்சது சாதாரணம்.. பாகிஸ்தானை வீழ்த்த அவங்க உதவியதை மறக்காதீங்க.. ரோஹித் பேட்டி

தற்போது 30 வயதான அவர் மிகச் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் வேளையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு வந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement