ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சவுத் சாக்கில் 69, கேப்டன் ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 20, சுப்மன் கில் 46, விராட் கோலி சதத்தை அடித்து 100*, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் அடித்து 42.3 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மறுபுறம் ஷாகின் அப்ரிடி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கோலிக்கு சாதாரணம்:
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் நாட்டுக்காக விளையாட எப்போதும் விரும்பும் விராட் கோலிக்கு இது சாதாரண நாள் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். மேலும் குல்தீப் அக்சர் பட்டேல், பாண்டியா, ஷமி ஆகியோர் பவுலிங் துறையில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை மறக்காமல் ரோகித் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பந்து வீச்சில் சூப்பராக துவங்கினோம். பிட்ச் ஸ்லோவாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும். அங்கே எங்களுடைய அனுபவமிக்க பேட்ஸ்மேன்களை நம்பி 240 ரன்களை அடிக்கச் சென்றோம். குல்தீப், அக்சர், ஜடேஜா ஆகிய அனைவரும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் செல்ல வேண்டும். ஷாக்கீல் – ரிஸ்வான் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்”
ரோஹித் பாராட்டு:
“அங்கிருந்து போட்டியை நழுவ விடாமல் செய்தது முக்கியமானதாக இருந்தது. ராணா, ஷமி, பாண்டியா ஆகியோர் நன்றாக பவுலிங் செய்ததை மறக்கக்கூடாது. இது எங்களுடைய மொத்த அணியிடம் இருந்து நல்ல செயல்பாடு. எங்களுடைய வீரர்கள் தங்களிடம் இந்திய கிரிக்கெட் அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்துள்ளார்கள்”
இதையும் படிங்க: அந்த அதிர்ஷ்டம் கிடைச்சும் இந்தியாவிடம் விட்டுட்டோம்.. கோலி வெற்றியை பறிச்சுட்டாரு.. ரிஸ்வான் வருத்தம்
“சில நேரங்களில் அது தந்திரமாக இருக்கிறது. அவர்களில் நான் யார் அதிகமாக பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் முடிவுகளை எடுக்கிறேன். விராட் கோலி நாட்டுக்காக விளையாடுவதை விரும்புகிறார். எனவே அவர் இன்று செய்ததைப் பார்த்து எங்கள் அணி வீரர்களுக்கு ஆச்சரியமில்லை. இது அவருடைய சாதாரணமான நாள். என்னுடைய தசைப் பிடிப்பு காயம் தற்சமயத்தில் நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.



