க்ரீன் சிக்னல் காட்டிய NCA. ஹார்டிக் பாண்டியா விடயத்தில் ஏற்பட்டுள்ள திருப்பம் – பி.சி.சி.ஐ என்ன செய்யப்போகுது?

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக செயல்பட்டது பல்வேறு தரப்பிலும் பெரிய விமர்சனங்களை எழுப்பியது. மேலும் அவரது தேர்விலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து தான் எப்போது பந்துவீசும் அளவிற்கு தயாராகி வருகிறேனோ அப்போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து கொள்கிறேன் என்று கூறி இந்திய அணியில் இருந்து விலகிய பாண்டியா தொடர்ச்சியாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தனது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

pandya

- Advertisement -

மேலும் அதற்கிடையில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் குஜராத் அணி அவரை ரூபாய் 15 கோடி கொடுத்து ஏலத்திற்கு முன்னதாகவே வாங்கியது மட்டுமின்றி கேப்டனாகவும் நியமித்துள்ளது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ அறிவித்துள்ள ஒரு புது விதிப்படி இந்திய அணியின் காண்ட்ராக்டில் இருக்கும் வீரர்கள் தங்களது உடல் தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்று அண்மையில் ஒரு கட்டளை அளித்தது.

அதன்படி இந்திய அணியின் சி கிரேட் காண்ட்ராக்டில் இடம் பிடித்திருக்கும் ஹார்டிக் பாண்டியா பெங்களூர் அகாடமியில் தனது உடற்தகுதி தேர்வை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் : பாண்டியா உடற்தகுதி தற்போது தெளிவாகியுள்ளது. அவர் காயத்திலிருந்து தற்போது மீண்டுள்ளார். மேலும் பிசிசிஐயின் வழிகாட்டுதலின்படி தற்போது அவர் யோ யோ டெஸ்டிலும் கலந்துகொண்டார்.

pandya 1

யோயோ டெஸ்டில் அவர் 17 பிளஸ் மதிப்பு எடுத்துள்ளதால் நிச்சயம் அவர் விளையாடும் அளவுக்கு தகுதியாக உள்ளார். அதோடு மட்டுமின்றி நாங்கள் பந்துவீச அவரை அழைக்கவில்லை என்றாலும் அவராகவே முன்வந்து 135 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி அசத்தினார். தற்போது பாண்டியா இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளார் என்று NCA நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இனி வரும் தொடர்களில் இந்திய அணிக்காக பாண்டியா தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பாண்டியா விவகாரத்தில் தற்போது பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஏனெனில் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போதும் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிசிசிஐ அழைப்பை மறுத்த அவர் தொடர்ச்சியாக தனது தனிப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருந்ததால் அவர் மீது சற்று பிசிசிஐ அதிர்ப்தியாக இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : தோனியை விட ரிஷப் பண்ட் ஆல்-டைம் கிரேட் விக்கெட் கீப்பராக வருவார் – முன்னாள் இந்திய வீரர் கணிப்பு

இருப்பினும் எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு பாண்டியா ஒரு முக்கிய வீரர் என்பதால் நிச்சயம் அவரை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணியில் அதிகாரப்பூர்வமாக பாண்டியா இணைவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement