வெங்கடேஷ் ஐயர், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் பாண்டியாவால் வந்த சிக்கல் – அட என்னப்பா இது?

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்த ஹர்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக பவுலிங் செய்வதை தவிர்த்து வந்தார். ஆனாலும் அதிரடியான பேட்டிங் இவரிடம் இருப்பதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலும் பாண்டியா ஒரு ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பெற வைத்து இருந்தாலும் அவர் முழுநேர பேட்ஸ்மேனாகவே விளையாடி இருந்தார். அந்த உலக கோப்பை தொடரில் பாண்டியா பந்துவீசாததால் அவர்மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்தன.

Pandya

- Advertisement -

அதன் காரணமாக உலககோப்பை தொடர் முடிந்த கையோடு பாண்டியா இந்திய அணியில் இருந்து தற்காலிகமாக விலகினார். ஏனெனில் தான் மீண்டும் முழுவதுமாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் வரை தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று இந்திய அணியின் தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்திருந்தார். அதனால் உலககோப்பை தொடருக்குப் பின்னர் வந்த தென்னாப்பிரிக்க தொடர், இலங்கை தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என அனைத்து தொடரில் இருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டு இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

பாண்டியாவின் இந்த விலகல் காரணமாக தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டி20 இந்திய அணியில் ஆல் ரவுண்டர் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடைபெற்று வரும் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் தான் கூறியது போலவே தற்போது மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் பாண்டியா அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார். மேலும் பீல்டிங்கில் எப்போதுமே சிறப்பாக செயல்படும் அவர் இம்முறையும் அசத்தலான பீல்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

pandya 2

நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் முறையே (33, 31, 27, 50, 87) என ரன்களை குவித்து அசத்தி வருகிறார். அதேபோன்று பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் முழுமையாக வீசி வருவதால் மீண்டும் அவர் இந்திய அணியில் இணைய தயாராக இருப்பதை தனது இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் வெளிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று அனைவரும் கூறிவருகின்றனர். இவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் சொதப்பும பட்சத்தில் அணியின் முதன்மை ஆல்ரவுண்டர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : நான் இந்த மாதிரியெல்லாம் விளையாடியதே இல்ல. ஆனா.. – வெற்றிக்கு பிறகு ஓப்பனாக பேசிய ஹார்டிக் பாண்டியா

இந்நிலையில் ஹர்டிக் பாண்டியாவின் இந்த அசத்தலான கம்பேக் அனைவரையும் வியக்க வைத்தது மட்டுமின்றி நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியிலும் அவரின் இடத்தை உறுதி செய்துள்ளது என்று கூறலாம்.

Advertisement