நான் இந்த மாதிரியெல்லாம் விளையாடியதே இல்ல. ஆனா.. – வெற்றிக்கு பிறகு ஓப்பனாக பேசிய ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டை பெற்று வருகிறது. ஏனெனில் மும்பை அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டராக இருந்து வந்த பாண்டியா பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்துள்ளார். ஆனால் அவரை மும்பை அணி காயம் காரணமாக இந்த ஆண்டு அணியில் இருந்து வெளியேற்றியது. அதன் பின்னர் மெகா ஏலத்தில் மிகப் பெரிய விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா முன்னதாகவே குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டது மட்டுமின்றி அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

gt

- Advertisement -

அப்படி புதிய கேப்டனாக பதவியேற்ற ஹர்டிக் பண்டியா தலைமையிலான குஜராத் அணி எவ்வாறு செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று அசத்திய குஜராத் அணி நேற்று பலம்வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது.

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் தங்களது 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 52 பந்துகளைச் சந்தித்த பாண்டியா 8 பவுண்டரி 4 சிக்சர்கள் என 87 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அதோடு ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த சஞ்சு சாம்சன் ரன் அவுட்டையும் பாண்டியா செய்திருந்தார்.

Hardik Pandya GT Vs RR

இப்படி ஒரு ஆல்-ரவுண்டராக 3 துறையிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அசத்தி இருந்தார். இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றி குறித்து பேசிய பாண்டியா கூறுகையில் : கேப்டன் பதவியை நான் மிகவும் ரசித்து செய்கிறேன். கேப்டனாக இருப்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது. நான் ஒரு தலைவராக ஒரு அணியை வழிநடத்த அற்புதமாக உள்ளது. என்னை பொருத்தவரை எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

- Advertisement -

நான் இன்று விளையாடியது போன்று எல்லாம் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்தது எல்லாம் கிடையாது. அது என்னுடைய பழக்கமும் இல்லை. ஆனால் இந்த போட்டியில் தற்போது நீண்டநேரம் ஆடி இருக்கிறேன். மேலும் போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் என்னால் துணிச்சலான முடிவு எடுத்து அதனை கணக்கிட்டு அதிரடியாக விளையாட முடிகிறது. எனது இந்த ஆட்டத்திற்காக நான் நிறைய உழைத்து வருகிறேன்.

இதையும் படிங்க : பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 விதத்திலும் அவரு அசத்திட்டாரு – தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொண்ட சாம்சன்

இந்த போட்டியில் எனக்கு ஏற்பட்டது வெறும் முதுகு பிடிப்பு மட்டும்தான். மற்றபடி தீவிர காயம் எதுவும் இல்லை. நிச்சயம் இனிவரும் போட்டிகளில் என்னுடைய ஆட்டம் இவ்வாறு சிறப்பாகவே அமையும் என்றும் குஜராத் அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெறும் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement