பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 விதத்திலும் அவரு அசத்திட்டாரு – தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொண்ட சாம்சன்

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டம் நேற்று டி.ஒய் பாட்டில் மைதானத்தில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி ஹர்டிக் பாண்டியா, அபினவ் மனோகர் மற்றும் மில்லர் ஆகியோர் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா 52 பந்துகளை சந்தித்த நிலையில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் என 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

- Advertisement -

அதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லரின் அதிரடி துவக்கம் காரணமாக 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஆனாலும் 2 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி ஆறாவது ஓவரின் இறுதிப் பந்தில் பட்லரும் ஆட்டம் இருந்து வெளியேற அந்த அணியின் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் அவர்களால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Hardik Pandya GT Vs RR

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : குஜராத் அணி இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை அதிகமாக அடித்துவிட்டது. நிச்சயம் அவர்களது பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக ஹர்டிக் பாண்டியா விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இவ்வளவு பெரிய ரன் குவிப்பிற்கு பாண்டியா தான் காரணம். நாங்கள் இந்த போட்டியில் 3-வது வீரராக அஷ்வின் களமிறங்க காரணம் யாதெனில் : விக்கெட்டுகள் கையில் இருக்கும்போது இந்த ரன்களை நாங்கள் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று ஆரம்ப ஓவர்களில் எங்களது ரன்ரேட் மிக சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : 2012-ல் பெண்களை வைத்து இந்தியா எங்களை கவிழ்க்க நினைத்தது – புதிதாக உருட்டும் பாக் கிரிக்கெட் வாரிய சேர்மன்

ஆனால் பட்லர் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இன்றைய போட்டியில் பாண்டியாவை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் அணியிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என்று சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement