தப்பு கணக்கு போட்ட ஹார்டிக் பாண்டியா.. பாடம் புகட்டிய மாஸ்டர் தோனி – இனிமேல் யோசிக்க கூட கூடாது

Hardik
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆரம்பித்ததில் இருந்தே மும்பை அணியின் கேப்டன் பாண்டியா குறித்த விமர்சனங்கள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஏனெனில் சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை நியமித்ததில் இருந்தே ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதோடு களத்தில் ஹார்டிக் பாண்டியாவின் செயல்பாடுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிராக போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க ஹார்டிக் பாண்டியாவும் ஒரு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் அவரது முடிவினை விளாசி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது போட்டியின் முக்கியமான கடைசி ஓவரை ஹார்டிக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் மீதம் இருந்த நான்கு பந்துகளில் தோனி மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு இரண்டு என்ன 20 ரன்கள் குவித்தது சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

இந்நிலையில் இந்த கடைசி ஓவரை வீச இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் இருந்தும் ஹர்திக் பாண்டியா கேப்டன் என்ற ஒரே ஒரு திமிரால் வீசியது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை அணி சார்பாக பந்துவீச 6 பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஹார்டிக் பாண்டியா வம்படியாக கடைசி ஓவரை வீசினார். அதற்கு தகுந்தார் போன்று பாடம் கற்பித்த தோனி அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு பாண்டியா கடைசி நேரத்தில் வீசும் பந்துவீச்சாளர் இல்லை என்பதை நிரூபித்தார்.

இதையும் படிங்க : தோனிக்காக வேணும்னே இப்படியா பண்ணுவீங்க.. அந்த ரெண்டுமே ரொம்ப மோசம்.. பாண்டியாவை விளாசிய கவாஸ்கர்

மேலும் பாண்டியா வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் துவக்க ஓவர் மற்றும் மிடில் ஓவர்களில் தான் சிறப்பாக வீசுவார். இதுவரை இறுதிக்கட்ட ஓவர்களில் பெரிதாக பந்துவீசியது கிடையாது. ஆனால் அவர் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை வீசியது அந்த அணியை குழிக்குள் தள்ளியதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement