தோனிக்காக வேணும்னே இப்படியா பண்ணுவீங்க.. அந்த ரெண்டுமே ரொம்ப மோசம்.. பாண்டியாவை விளாசிய கவாஸ்கர்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 4வது தோல்வியை பதிவு செய்தது. இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் ஆரம்பத்திலேயே மும்பை 3 தொடர் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற மும்பை வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டதாக பார்க்கப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதி பரம எதிரி சென்னைக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு மீண்டும் சரிந்துள்ளது. அந்த தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஏனெனில் சிஎஸ்கே பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் அவர் சுமாராக பந்து வீசினார்.

- Advertisement -

விளாசிய கவாஸ்கர்:
அதை பயன்படுத்திய சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி 6, 6, 6, 2 என ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 20* (4) ரன்கள் விளாசி 2011 உலகக் கோப்பை ஃபைனல் போல அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். கடைசியில் பார்த்தால் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் மும்பையை தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை 4வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் படுமோசமாக இருந்ததாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அத்துடன் தம்முடைய முன்னாள் இந்திய கேப்டனான தோனி சிக்ஸர்களை அடித்து ஹீரோவாகட்டும் என்ற வகையில் பாண்டியா வேண்டுமென்றே சுமாரான பந்துகளை வீசியதாகவும் விமர்சிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது அவர் என் ஹீரோவுடன் அரவணைப்பை பெறுவதற்காக பந்து வீசுகிறேன் என்பது போல் தெரிந்தது. குறிப்பாக தோனி சிக்ஸர்கள் அடிக்கும் விதமான பந்துகளை அவர் வீசினார். ஒரு சிக்சர் பரவாயில்லை. ஆனால் பேட்ஸ்மேன் (தோனி) லென்த் பங்கிற்காக காத்திருக்கும் போது அடுத்த பந்தில் பாண்டியா அதையே வீசினார்”

இதையும் படிங்க: ரெய்னாவை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. ஈஎல் க்ளாஸிக்கோ நாயகனாக 3 புதிய வரலாற்று சாதனை

“அதே போல தோனி மீண்டும் சிக்ஸர் அடிப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்த போது அவருடைய காலில் பாண்டியா ஃபுல் டாஸ் பந்தை வீசினார். அந்த வகையில் இது மிகவும் சுமாரான பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப். என்னை கேட்டால் ருதுராஜ், சிவம் துபேவின் அதிரடிக்கு பின்பும் சென்னை அணியை 185 – 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement