ரெய்னாவை முந்திய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. ஈஎல் க்ளாஸிக்கோ நாயகனாக 3 புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை வீழ்த்தியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20* ரன்கள் அடித்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 11 பவுண்டரி 5 சிக்சருடன் 105* (63) ரன்கள் குவித்து போராடினார். ஆனால் எதிர்புறம் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, கேப்டன் பாண்டியா உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 20 ஓவரில் மும்பையை 186/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்த பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஹிட்மேன் சாதனைகள்:
அதனால் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து போராடிய ரோகித் சர்மாவின் போராட்டம் வீணானது. இருப்பினும் இந்தப் போட்டியில் அடித்து 5 சிக்சர்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீரர் வரலாற்றை ரோகித் சர்மா படைத்துள்ளார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 500*
2. விராட் கோலி : 383
3. எம்எஸ் தோனி : 331

இது போக ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 1025 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 1000+ பவுண்டரிகள் மற்றும் 500+ சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய மற்றும் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அவரை தவிர்த்து இந்த உலகிலேயே கிறிஸ் கெயில் மட்டுமே 1000+ பவுண்டரிகள் மற்றும் 500 சிக்சர்கள் (1132 பவுண்டரி மற்றும் 1056 சிக்ஸர்கள்) அடித்துள்ளார்.

- Advertisement -

அதை விட சென்னைக்கு எதிராக இதுவரை ரோகித் சர்மா 777* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஈஎல் க்ளாஸிக்கோ எனப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 777*
2. சுரேஷ் ரெய்னா : 710
3. எம்எஸ் தோனி : 675
4. அம்பாதி ராயுடு : 658
5. கைரன் பொல்லார்ட் : 583

இதையும் படிங்க: சதம் அடிச்சும் கொண்டாடாத ரோஹித் சர்மா.. இந்த மனுஷனயா கேப்டன் பதவியில் இருந்து தூக்குனீங்க – விவரம் இதோ

அத்துடன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரோகித் பெற்றுள்ளார். இது போக ஐபிஎல் தொடரில் அதிக வயதில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 37 வருடம் 356 நாட்கள்
2. ரோஹித் சர்மா : 36 வருடம் 350 நாட்கள்*
3. விரேந்திர சேவாக் : 35 வருடம் 222 நாட்கள்

Advertisement