சதம் அடிச்சும் கொண்டாடாத ரோஹித் சர்மா.. இந்த மனுஷனயா கேப்டன் பதவியில் இருந்து தூக்குனீங்க – விவரம் இதோ

Rohit
- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை சந்தித்தது. வான்கடே மைதானத்தில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது 206 ரன்களை குவிக்க பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்கு தான் என்பதால் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி தழுவியது.

இந்த போட்டியின் போது கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் மற்றும் 2 ரன்கள் என 20 ரன்கள் குவித்தது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அனைவருமே தோனியின் இந்த அதிரடியை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் மற்றொருபுறம் மும்பை அணியின் வெற்றிக்காக தனி ஒரு நபராக போராடிய ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 105 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மும்பை அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரியளவு ரன்களை குவிக்காத வேளையில் தனி ஒருவராக இறுதிவரை போராடிய ரோகித் சர்மா இறுதி ஓவரின் போது சதம் அடித்தும் அதை பெரியதாக கொண்டாடவில்லை.

இதையும் படிங்க : ராகுலை முந்தி.. வியந்து பார்த்த தல தோனியின் 11 வருட சாதனையை உடைத்த ருதுராஜ் 2 அதிரடி சாதனை

ஏனெனில் அணி தோற்கும் நிலையில் சதம் அடித்து கொண்டாடுவது தேவையற்ற ஒன்று என்ற மனநிலையுடன் இருந்த ரோகித் சர்மா சரத்தை கொண்டாடாமலேயே அடுத்த பந்துக்கு தயாராகினார். இப்படி அணி வெற்றி பெற வேண்டும் என்று முழு முனைப்புடன் இறுதி வரை போராடிய இவரையா கேப்டன் பதவியில் இருந்து நிர்வாகம் நீக்கியது என ரசிகர்களும் அவரது இந்த இன்னிங்ஸ்ற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement