- Advertisement -
ஆசிய கோப்பை

ஜஸ்ப்ரீத் பும்ரா இருக்கும்போதே முதல் ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியா – திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது முதலில் பந்துவீசி வருகிறது.

முதல் ஓவரை ஹார்டிக் பாண்டியா வீச என்ன காரணம் ? :

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே இடம் பிடித்தார். மற்றபடி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்ததால் ஹார்டிக் பாண்டியா இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியின் முதல் ஓவரை ஹார்டிக் பாண்டியா வீசியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படி முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா அணியில் இருக்கும் போதும் ஹார்டிக் பாண்டியா முதல் ஓவரை வீச என்ன காரணம்? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.

அதன்படி போட்டி நடைபெறும் இந்த துபாய் மைதானத்தில் ஆடுகளத்தில் ஒருபுறம் சற்று புல் நிறைந்த பகுதியாகவும், மறுபுறம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தட்டையான பந்துவீச்சு ஏரியாவும் இருந்தது. போட்டி ஆரம்பிக்கும் போது சற்று புல் வளர்ந்த பெவிலியன் எண்ட் வாயிலாக ஆரம்பித்ததால் ஹார்டிக் பாண்டியா பந்துவீசினார்.

- Advertisement -

ஆடுகளத்தின் இருபுறமும் வெவ்வேறு தன்மை கொண்டிருந்ததால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஃபெவிலியன் எண்டை பும்ரா எடுத்துக் கொண்டார். சாதாரணமாக புல் நிறைந்த எண்டை ஹார்டிக் பாண்டியா எடுத்துக் கொண்டார். இதன் காரணமாகவே முதல் ஓவரை ஹார்டிக் பாண்டியாவும், இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரீத் பும்ராவும் வீசியிருந்தனர்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு இடம்.. கில் ஓப்பனர்.. யு.ஏ.இ அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் தற்போது வரை 9 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரக அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 5 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -