சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இம்மாதம் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :
இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது இன்று தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட வேளையில் அதில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் வெளியாகியுள்ளது. இந்த டி20 அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற பெரிய எதிர்பார்ப்பு நிலவு வந்த வேளையில் அதிகம் பேசப்பட்ட சஞ்சு சம்சனின் இடம் பிளேயிங் லெவனில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துவக்க வீரராக இல்லாமல் மிடில் ஆர்டரில் ஐந்தாவது வீரராக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார்.
அபிஷேக் ஷர்மாவுடன் சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறங்குகிறார். மூன்றாவது இடத்திலும் திலக் வர்மா, கேப்டன் சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக ஐந்தாவது இடத்தில விளையாடுவார் என்று தெரிகிறது. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஷிவம் துபே, ஹார்டிக் பாண்டியா, அக்சர் பட்டேல் என மூன்று வீரர்கள் முறையே ஆறு, ஏழு, எட்டு, ஆகிய இடங்களில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்று தெரிகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : மீண்டும் ஒன்றினையும் அண்டர் 19 ஜோடி.. டி20 கிரிக்கெட்டில் துவங்கும் அடுத்த சகாப்தம் – விவரம் இதோ
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்ரவர்த்தி.



